எதிர்தீநுண்மங்கள் — தீநுண்மங்களின் வளர்ச்சியைக் கொல்லும் அல்லது தடுக்கும் திறன் கொண்ட மருந்துகள்.
சாதாரண தடிமன் — ஆங்கிலத்தில் கோல்டு அல்லது கோம்மன் கோல்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது மேல் சுவாசக் குழாயின் தீநுண்மப்பிணியாகும் இது முதன்மையாக மூக்கை பாதிக்கிறது. மேலும், தொண்டை சைனஸ்கள், குரல்வளை ஆகியவற்றையும் பாதிக்கலாம். தடிமன் தீநுண்மங்கள் பரவிய இரண்டு நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தோன்றக்கூடும். இது பலவித தீநுண்மங்களால் விளைகிறது.
சளிக்காய்ச்சல்/குளிர் காய்ச்சல் (ஃப்ளு) — இன்ஃப்ளூன்ஸா அல்லது ஃப்ளு என்பது சுவாசப்பை நோயாகும், இதுவும் ஒரு தீநுண்மப்பிணியாகும். காய்ச்சல், சளி, தசை வலி, இருமல், நெரிசல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இது இன்ஃப்ளூன்ஸா தீநுண்மங்களால் விளைகிறது.
கபவாதம் (நிமோனியா) — தீநுண்மங்களால் அல்லது நுண்ணுயிர்களால் ஏற்படும் நுரையீரல் (சுவாசக் குழாயின்) நோயாகும்,
“வழக்கமாக தடிமனுக்கும் சளிக்காய்ச்சலுக்கும் படுக்கை ஓய்வும் அதிகமான தண்ணீரைக் குடிப்பதும் மட்டுமே போதும். மருந்துகள் தேவைப்படாது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் கடுமையான சளிக்காய்ச்சலுக்கு மருத்துவர் ஒசெல்ட்தாமிவிர் (தாமிஃப்ளூ) போன்ற ஒரு எதிர்தீநுண்மம் தடுப்பு மருந்தைப் பரிந்துரைக்கலாம்."