பெரும்பாலும் ‘கொல்லிகள் அற்ற புலாலுணவு’ என்று கூறப்படும் இறைச்சி மற்றும் இறைச்சி தயாரிப்புகளில் கண்டறியக்கூடிய எஞ்சிய கொல்லிகள் ஏதும் இருக்காது. கொல்லிகள் இல்லாமல் வளர்க்கப்பட்ட விலங்குகளிடமிருந்து இறைச்சி வருகிறது என்று நுகர்வோர் தவறாக நம்பலாம். மேம்பட்ட நாடுகளில் பண்ணை விலங்குகளில் கொல்லிகள் பயன்படுத்தும் முறைகள் மற்றும் புலாலுணவு தொடர்பான தயாரிப்புகளிலுள்ள கொல்லிகளின் எச்சங்களை அகற்ற வேண்டிய கால அளவு கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில், இறைச்சி மற்றும் கோழி உற்பத்திப் பொருள்களின் முத்திரைச் சீட்டுகளில் ‘கொல்லிகள் அற்றது’ உரிமைகோரல் அனுமதிக்கப்படாது.[1] இருப்பினும், பால் மற்றும் பாலாக்கப் பொருட்களின் முத்திரைச் சீட்டுகளில் ‘கொல்லிகள் அற்றது’ உரிமைகோரல் அனுமதிக்கப்படுகிறது. இவை அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (எஃப்.டி.ஏ) கட்டுப்படுத்தப்படுகின்றன. எஃப்.டி.ஏ-க்கு ‘கொல்லிகள் அற்றது’ என்ற கூற்றுக்கு ஒழுங்குமுறை வரையறை கிடையாது. ஆனால், உற்பத்தியில் கொல்லிகளின் எச்சங்கள் இல்லை என்று கூறுபவர்களை நம்புகிறது. ஆகையால் அவர்களின் கோரிக்கை தப்பா சரியா என்று எஃப்.டி.ஏ உறுதிப்படுத்துவது இல்லை. எஃப்.டி.ஏ ‘கொல்லிகள் அற்றது’ என்று உறுதிக்கூறும் சான்றிதழையும் கேட்பதில்லை. ‘கொல்லிகள் அற்றது’ என்ற உத்தரவாதத்தை அளித்தாலும் மாடுகளுக்குக் கொல்லிகளோ மருந்துகளோ கொண்டு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று உத்தரவாதம் அளிக்காது. ‘கொல்லிகள் அற்ற’ கூற்றுக்கு உலகளாவிய தரநிலை அல்லது ஒழுங்குமுறை வரையறை இல்லை என்பதை நினைவில் கொள்க.
எந்தவொரு கொல்லிகளும் இல்லாமல் வளர்க்கப்படும் கால்நடைகளிடமிருந்து செய்யப்படும் உற்பத்திப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது பொது சுகாதார நெருக்கடியைத் தீர்க்க நுகர்வோர் எடுக்கக்கூடிய ஒரு முக்கியமான படியாக முன்மொழியப்பட்டுள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தி, நோயைத் தடுப்பதற்கான மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தி கொல்லிகள் இல்லாமல் கால்நடைகளை வளர்ப்பது சாத்தியமாகும்.
ஆதார நூற்பட்டியல்
[1] பசுமையான முடிவுகளைத் தேர்ந்தெடுத்தல் (2017 நவம்பர் 16). கொல்லிகள் அற்றது என்றால் என்ன? வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.
Greener Choices. (2017, November 16). What does Antibiotic Free mean? Retrieved from http://greenerchoices.org/2017/11/16/antibiotic-free-mean/