கொல்லிகள் ஊட்டிய
  
Translated

கால்நடைகளுக்கு எவ்வாறு கொல்லிகள் கொடுக்கப்படுகின்றன? பொதுவாக, கொல்லிகள் உணவு அல்லது குடிநீரில் கலந்து கால்நடைகளுக்குப் கொடுக்கப் படுகின்றன. 


ஒரே நல்வாழ்வு — மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல்கள் ஆகியவற்றுக்கு உகந்த ஆரோக்கியத்தை அடைவதற்கு உள்நாட்டிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் செயல்படும் பல பிரிவுகளின் கூட்டு முயற்சிகள்.

 

“கொல்லிகள் ஊட்டப்பட்ட கால்நடைகள் கொல்லிகளாலும் எதிர்நுண்ணுயிரிகளாலும் பாதிப்படைந்திருக்கும்.”

 

“பொதுவாக, நாம் உண்ணும் பெரும்பாலான இறைச்சி கொல்லிகள் ஊட்டப்பட்ட விலங்குகளிடமிருந்து வருகிறது. கால்நடைகள் வேகமாகவும் பெரியதாகவும் வளரவும், நுண்ணுயிரிப்பிணிகளைத் தடுக்கவும் கொல்லிகள் வழங்கப்படுகின்றன.”[1]

Learning point

கால்நடைகளுக்குக் கொல்லிகள் பயன்பாடு குறித்து நாம் கவலைப்பட வேண்டுமா?

 

உலகளவில் நாம் உண்ணும் உணவாகிய ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன், இறால் ஆகியவற்றுக்குக் கொல்லிகள் வழங்கப்படுகின்றன.[2] விவசாயிகள் விலங்குகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நோய்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிக்கவும் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். விலங்குகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க எதிர்நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவது உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பல நாடுகளில் விலங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் கொல்லிகளின் மொத்த அளவு எவ்வளவு என்று தெரியவில்லை. மாமிச உணவுகளுக்கானத் தேவைகள் அதிகரித்து வருவதால் கொல்லிகளின் மொத்த அளவு அநேகமாக உயரும்.

 

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 200,000 முதல் 250,000 டன் கொல்லிகள் தயாரிக்கப்பட்டு நுகரப்படுகின்றன.[3] இந்தக் கொல்லிகளில் 70% விலங்குகளாலும், 30% மனிதர்களாலும் நுகரப்படுகின்றன.  மனிதர்களும் விலங்குகளும் உட்கொள்ளும் பெரும்பாலான கொல்லிகள் மலம், சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட்டு கழிவுநீர் அமைப்புகளுக்குள் நுழைந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. வெளியேற்றப்பட்ட கொல்லிகள், ​​மனிதர்களிலும் விலங்குகளிலும் வாழும் நுண்ணுயிரிகளை அணுகும் போது எதிர்ப்பாற்றலை உருவாக்கலாம். கொல்லிகள் எதிர்க்கும் திறனைக் கொண்ட நுண்ணுயிரிகள் பின்னர் மற்றவர்களுக்கும் சுற்றுசூழலுக்கும் பரவக்கூடும். இதனால், நோய்களும் மரணங்களும் ஏற்படலாம் (வடிவம் 1).

 

நல்ல தரமான பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் வாழ்வின் கடைசி 10 முதல் 20 நாட்களில் கொல்லிகள் கொடுக்கப்படாத இறைச்சியை உட்கொள்வது பாதுகாப்பானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

கடைசி நாட்களில் கால்நடைகளுக்குக் கொல்லி கலக்காத உணவளிப்பதனால் இறைச்சியில் கொல்லிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தவிர, இறைச்சியைப் பதப்படுத்தும் ஆலைகளைக் கொல்லிகள் எதிர்க்கும் திறனைக் கொண்ட நுண்ணுயிரிகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

 

விலங்குகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நோயைத் தடுப்பதற்கும் கொல்லிகளின் பயன்பாட்டை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு விவசாயிகளுக்கும் உணவு உற்பத்தியாளர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது.[5] ஒரே பண்ணையிலோ மந்தையிலோ எதோ ஒரு விலங்கிற்கு நோய் கண்டிருந்தால், மொத்தமாக ஆரோக்கியமான விலங்குகளின் நோயைத் தடுக்க கொல்லிகளைக் கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்கிறது.

 

வடிவம் 1: கொல்லியெதிர்ப்பு: பண்ணையில் தொடங்கி மேசை வரை[4]

 

ஆதார நூற்பட்டியல்

[1]     ஆர்செனால்ட், சி. (2015, மார்ச் 24). கொல்லிகள் ஊட்டப்பட்ட கால்நடைகள் பெரும்படியான அதிகரிப்பு, பெருங்கிருமிப்பிணியை எதிர்பாராத வேகமாக கொண்டு வருகிறது. இவ்வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

Arsenault, C. (2015, March 24). A huge spike in antibiotic-fed livestock is bringing the superbug epidemic even faster than feared. Retrieved from https://www.businessinsider.com/r-soaring-antibiotic-use-in-animals-fuels-super-bug-fears-2015-3

[2]     உணவு சுவடு அமைப்பு. (2019). நமது உணவு அமைப்பில் கொல்லிகள். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

Food Print Organization. (2019). Antibiotics in Our Food System. Retrieved from

http://www.sustainabletable.org/257/antibiotics

[3]     ஒ'நெயில்., ஜே (2015). வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள எதிர்நுண்கிருமிகள்: தேவையற்ற பயன்பாடு மற்றும் கழிவுகளைக் குறைத்தல். நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் பற்றிய சீராய்வு. வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

O'Neill, J. (2015). Antimicrobials in Agriculture and The Environment: Reducing Unnecessary Use and Waste. The Review on Antimicrobial Resistance. Retrieved from https://ec.europa.eu/health/amr/sites/amr/files/amr_studies_2015_am-in-agri-and-env.pdf

[4]     நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் (2013). கொல்லிகள் எதிர்ப்பு: பண்ணையில் தொடங்கி மேசை வரை

        Center for Disease Control and Prevention (CDC). (2013). Antibiotic Resistance [Picture]. In www.cdc.gov. Retrieved from https://www.cdc.gov/media/pdf/dpk/dpk-antibiotics-week/antibiotic-resistance-farm-to-table.pdf

[5]     உலக சுகாதார அமைப்பு. (2017, நவம்பர் 7). ஆரோக்கியமான விலங்குகளுக்குக் கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

World Health Organization (2017, November 7). Stop using antibiotics in healthy animals to preserve their effectiveness. Retrieved from https://www.who.int/news-room/detail/07-11-2017-stop-using-antibiotics-in-healthy-animals-to-prevent-the-spread-of-antibiotic-resistance

 

Related words.
Word of the month
New word