தீநுண்மங்கள்
  
Translated

தீநுண்மங்கள் — கண்ணால் பார்க்க முடியாத, எல்லா இடங்களிலும் காணப்படும் எளிய, சிறிய, உயிரற்ற உயிரினங்கள். உட்கருவும் சுவரும் இல்லாத ஓர் உயிரினமாகும். மேலும், அது உயிரற்றதாகக் கருதப்படுகிறது. தீநுண்மங்களுக்கு இனப்பெருக்க ஓம்புயிர் அதாவது இன்னொரு உயிரணு (நுண்ணுயிரிகள், விலங்குகள், தாவரங்கள் உயிரணுகள்) தேவைப்படுகிறது.

 

“கொல்லிகள் தீநுண்மங்களைப் பாதிக்காது. கடுமையான தீநுண்மப்பிணிகளுக்குச் சிகிச்சையளிக்க சில எதிர்தீநுண்மங்கள் கிடைக்கின்றன, சில தீநுண்மங்கள் இந்த எதிர்தீநுண்மங்கள் செயல்படுவதைத் தடுக்கும் திறன் (எதிர்ப்பாற்றல்) கொண்டவை."

 

“எதிர்தீநுண்மங்கள் நிறையக் கிடையாது. தீநுண்மப்பிணிகளைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளால் முடியும்.”

 

Learning point

கொல்லிகள் தீநுண்மப்பிணியை எவ்வாறு பாதிக்கின்றன?

 

கொல்லிகள் தீநுண்மங்களைக் கொல்லாது. அவை நுண்ணுயிர்களைக் கொல்லும். ஆகவே, கொல்லிகள் நுண்ணுயிர்ப்பிணிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள். தீநுண்மங்கள் விலங்குகள், தாவரங்கள் உயிரணுக்களுக்குள் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஏனெனில், அவைகளால் ஓம்புயிர் இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியாது. சில கொல்லிகள் நுண்ணுயிரிகளின் உயிரணு கலச்சுவர்களச் சீர்க்குலைக்கின்றன. மற்றவை நுண்ணுயிர் உயிரணுக்களில் புரதங்களின் தொகுப்பைத் தடுக்கின்றன. இந்தக் கட்டமைப்புகள் (கலச்சுவர்கள், புரதங்களின் தொகுப்பு) தீநுண்மங்களில் இல்லை. அவை வேறு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. [1]

 

சில தீநுண்மப்பிணிகளுக்கு எதிர்தீநுண்மங்கள் மூலம் வெற்றிகரமாகச் சிகிச்சையளிக்க முடியும். நீர்க்கோளவான் சின்னம்மை தீநுண்மம், (ஹெர்பிஸ் சின்னம்மை), ஈரல் நோய் “சி” தீநுண்மம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஈரல் நோய் “பி”, எச்.ஐ.வி போன்ற பிற தீநுண்மப்பிணிகளை அடக்கக்கூடிய மருந்துகள் உள்ளன. இவை நோயாளிக்குத் தீங்கு விளைவிக்காமல், தீநுண்மங்கள் மற்றவர்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றது.

 

நச்சுயிரிப்பிணிகளுக்கான எதிர்தீநுண்மங்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட தீநுண்மங்களுக்கு எதிராகப் பல தடுப்பு மருந்துகள் உள்ளன.  தடுப்பு மருந்துகள் நோயெதிர்ப்பு அமைப்பு சக்தியைத் தூண்டி பிறபொருளெதிரிகளை உருவாக்குகின்றன. இந்தப் பிறபொருளெதிரிகள் உடலில் நுழையும் தீநுண்மங்களை அடையாளம் கண்டு, அது பிணியை உண்டாக்குவதற்கு முன்பே அதை செயலிழக்கச் செய்கின்றன. தட்டம்மை, வெறி விலங்குக்கடி நோய்களைத் தடுக்க உதவும் சிறந்த வழி தடுப்பு மருந்துகளே.

 

ஆதார நூற்பட்டியல்

[1]    ஏன் கொல்லிகள் தீநுண்மங்களைக் கொல்வதில்லை

Why Don’t Antibiotics Kill Viruses?

https://www.drugs.com/article/antibiotics-and-viruses.html

Related words.
Word of the month
New word