அருங்கொல்லிகள்
  
Translated

அருங்கொல்லிகள் — தீவிர நுண்ணுயிர்ப்பிணி சிகிச்சைக்கு ஒன்று அல்லது சில மாற்றுகளில் ஒன்றான மிகமுக்கியமான கொல்லிகள். இந்த அருங்கொல்லிகளின் பட்டியலை உலக சுகாதார அமைப்புத் தயாரிக்கிறது.


மருத்துவத் துறையில் முக்கியமான கொல்லிகள் — உலக சுகாதார அமைப்பால் பட்டியலிடப்பட்ட மனித ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை என வகைப்படுத்தப்பட்டக் கொல்லிகள்.

 

“வளர்ந்த நாடுகளில், பெரும்பாலான பண்ணைகள் அதிக முன்னுரிமை கொண்ட அருங்கொல்லிகளை முழுமையாக உபயோகிப்பதை நிறுத்திவிட்டனர்.”

 

“புலால் வழங்கும் வணிகர்களிடமும் வரையறுக்கப்பட்டக் கொல்லிகளின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தார் கேட்டுக்கொண்டுள்ளது.”

Learning point

மனித ஆரோக்கியத்திற்கு முக்கியமான அருங்கொல்லிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன

 

2005ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, உலக சுகாதார அமைப்பு மனித மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிற அனைத்து எதிர்நுண்கிருமிகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலைத் தயாரித்துள்ளது. இவை பெரும்பாலான கால்நடை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

மனித மருத்துவத்திற்கு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அருங்கொல்லிகள் மூன்று வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

 

- இக்கட்டானவை

- மிக முக்கியமானமானவை 

- முக்கியமானவை

 

எதிர்நுண்கிருமிகளின் எதிர்ப்பை நிர்வகிக்க உதவுவதற்காக இந்தப் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இக்கட்டான எதிர்நுண்கிருமிகள் மனித மற்றும் கால்நடை மருத்துவத்தில் விவேகத்துடன் பயன்படுத்த உதவுகிறது.

 

2019ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு மனித மருத்துவத்திற்கான இக்கட்டான எதிர்நுண்கிருமிகளின் ஆறாவது திருத்தியப் பதிப்பை வெளியிட்டுள்ளது.[1] உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்த நிபுணர் பட்டறைகளின் முடிவுகள் கீழ்வருமாறு:

 

- மனிதரல்லாத மற்ற உயிரினங்களுக்கு எதிர்நுண்கிருமிகளைப் பயன்படுத்தியதால்தான் இந்தப்பாதகமான நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் தோன்றியுள்ளன என்ற தெளிவானச் சான்றுகள் உள்ளன.

- எதிர்நுண்கிருமிகள் மனிதரல்லாதத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்போது எதிர்ப்பாற்றல் கொண்ட நுண்கிருமிகள் விலங்குகளையும் உணவுப் பொருட்களையும் பாதிக்கின்றன. இதன் மூலம் இந்த எதிர்ப்பாற்றல் கொண்ட நுண்கிருமிகள் மனிதர்களையும் பாதிக்கின்றன.

- குறிப்பாக, மனிதர்களுக்குத் தேவையான அருங்கொல்லிகளை எதிர்க்கும் நுண்கிருமிகளால் வரும் விளைவுகள் மிக கடுமையானவை.

 

விலங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள், எடுத்துக்காட்டாக திமிக்கோசின் (Timicosin), மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால், அவை அருங்கொல்லிகளாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால், அவை மனிதர்களில் பயன்படுத்தப்படும் பிற கொல்லிகளைப் போலவே ஒரே வகுப்பில் (மெக்ரோலைட்ஸ், macrolides) உள்ளன. திமிக்கோசினை அளவுக்கு மீறியும் தவறான முறையிலும் பயன்படுத்தினால் மேக்ரோலைடு எதிர்ப்பாற்றல் கொண்ட நுண்ணுயிரிகள் தோன்றி பொதுமக்களுக்குப் பரவலாம்.

 

கோலிஸ்டின் (colistin) அந்திமக் கொல்லிகளில் ஒன்றாகும். பன்மருந்தெதிர்ப்பு நுண்ணுயிர் பிணிகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் காரணமாக விலங்கு வளர்ப்பில் இக்கொல்லியைப் பரவலாக பயன்படுத்தக்கூடாது. கோலிஸ்டின் எதிர்ப்புக்குக் காரணம் நுண்ணுயிரிகள் எம்சிஆர்-1 (mcr-1) என்ற ஒரு மரபணுவைச் சுற்றுச்சூழலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

 

அமெரிக்க பென்சில்வேனியா நகரப் பெண்ணிடம் சிறுநீர் பாதை நோயை உண்டாக்கிய எஸ்செரிச்சியா கோலாய் (Eschechrichi coli) நுண்ணுயிரில் எம்சிஆர்-1 மரபணு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு ஒரு பன்றியின் குடலிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சீனா சமீபத்தில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு கொலிஸ்டின் பயன்பாட்டைத் தடைசெய்துள்ளது. மேலும், விலங்குகளின் நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் கொலிஸ்டின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஆணையையும் வெளியிட்டுள்ளது.

 

ஆதார நூற்பட்டியல்

[1]     உலக சுகாதார அமைப்பு (2019).  மனித மருத்துவத்திற்கு அருங்கொல்லிகள், 6வது திருத்தம்

World Health Organization (2019). Critically important antimicrobials for human medicine, 6th revision. ISBN 978-92-4-151552-8

[2]     பிரான்ஸ்வெல், எச். (2016, மே 26). உலகின் மிக மோசமானப் பெருங்கிருமிகள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது. வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Branswell, H. (2016, May 26). The world's worst superbug has made its way to the US. Retrieved from http://www.businessinsider.com/superbug-resistant-to-colistin-found-in-us-2016-5

 

Related words.
Word of the month
New word