கொல்லிகள் இல்லாமல் வளர்ப்பவை
  
Translated

கொல்லிகள் இல்லாமல் வளர்ப்பது (ரேய்ஸ்ட் வித்தாவுட் என்ட்டிபயோட்டிக்ஸ், ஆர்.டபலுயு.எ.,  Raised without antibiotics, RWA) — வாழ்நாளில் எந்தவொரு கொல்லிகளும் கொடுக்காமல் வளர்க்கப்பட்ட கால்நடைகள். குறிப்பாக, இவ்விலங்குகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களில் கொல்லிகள் அறவேக் கிடையாது.

 

எந்தக் கொல்லிகளும் இல்லை (நோ என்ட்டிபயோட்டிக்ஸ் எவர், என்.ஏ.இ, No antibiotics ever, NAE) — ‘கொல்லிகள் அறவே இல்லாமல் வளர்க்கப்பட்டது’ என்பதாகும்.


பலனுயிரிகள் — குறிப்பாக நன்மை பயக்கும் பண்புகளைக் கொண்ட நுண்ணுயிரிகள் (குடல் தாவரங்கள் போன்றவை).

 

“வளர்ந்த நாடுகளிலுள்ள பல துரித உணவு விடுதிகளில் கொல்லிகள் இல்லாமல் வளர்க்கப்படும் இறைச்சியை மட்டுமே வழங்குகின்றனர்.”

 

“வளரும் நாடுகளில் கொல்லிகள் இல்லாமல் வளர்க்கப்படும் விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட இறைச்சியின் விலை அதிகமே.  கொல்லிகள் அற்ற இறைச்சிக்கு 20 சதவிகிதம் அதிகமான விலையை விருப்பத்துடன் செலுத்துவார்களா என்பது தெளிவாக இல்லை.”

 

“கொல்லிகள் தேவைப்படும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு எந்தக் கொல்லிகளும் கொடுக்காமல் பண்ணையில் இருந்து அகற்றப்பட்டு, வழக்கமான சூழ்நிலைகளில் வளர்க்கப்படும் விலங்குகளுடன் சேர்க்கப்படும்”

Learning point

கொல்லிகள் இல்லாமல் வளர்க்கப்பட்டவை: அன்று இன்று நாளை

 

2007ஆம் ஆண்டில், அமெரிக்காவிலுள்ள பல கோழி பண்ணைகள் ‘எந்தக் கொல்லிகளும் இல்லாமல் வளர்க்கப்பட்ட’ தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கின.[1] கொல்லிகள் இல்லாமல் விலங்குகளை வளர்ப்பதற்குப் பண்ணை முதலாளிகள் அதிகமாக செலவு செய்தாலும் மேலான கொள்முதல் திறன் கொண்ட அமெரிக்காவில் நுகர்வோர்கள் கூடுதலாக விலை கொடுக்கத் தயாராக உள்ளனர்.

 

2015ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள உணவகங்களில் கொல்லிகள் அறவே இல்லாமல் வளர்க்கப்பட்ட மாமிசப்புரதங்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று அறிவித்தன.  இது ஒரு துணிவுள்ள வாக்குமூலம்.  ஏனெனில், நுகர்வோர் மற்றும் பொது சுகாதார குழுக்கள் துரித உணவுக் குழுமங்களிடம் விலங்குகளில் கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்க அழுத்தம் கொடுத்துள்ளன.[2]

 

கொல்லிகள் இல்லாமல் விலங்குகளை வளர்ப்பதற்கு ஒரு நல்ல நிருவாகம் தேவை. நோய் மற்றும் இறப்பைத் தடுக்க விவசாயிகள் சுகாதார மற்றும் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். இவை பின்வருமாறு:

 

- விலங்குகளின் பண்ணை நிலைமைகளை மேம்படுத்துதல்

- விலங்குகளின் அடர்த்தியைக் குறைத்தல்

- பலனுயிரிகள் மற்றும் மூலிகைகள் தீவனத்தில் வழங்குதல்

 

சூழலியல் விவசாயத்தில் இதை அடைவது சாத்தியமாகும்.  கால்நடை வளர்ப்பில் விலங்குகளைச் சூழலியல் விவசாய அமைப்பில் அத்தியாவசியமான கூறுகளாக ஒருங்கிணைக்க வேண்டும். பரந்த அளவிலான பயிர் மற்றும் கால்நடை மேலாண்மை அமைப்புகள் பின்வருவனவற்றைப் பின்பற்ற வேண்டும்.

 

- விளைவு வளத்தையும் மற்றும் வருமானத்தையும் அதிகரித்தல்

- உள்ளூர் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை அதிகப்படுத்தல்

- சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

- வெளிப்புற உள்ளீடுகளின் தேவையைக் குறைத்தல்

- நிலத்திற்கான போட்டியைக் குறைத்தல்

 

தற்போது, கால்நடைகளைக் கொல்லிகள் இல்லாமல் வளர்ப்பதற்கு அதிக செலவாகும். இந்த முறை குறைந்த மற்றும் நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் சாத்தியப்படாது. சரியான மேலாண்மையும் கொல்லிகளும் இல்லாமல் ஈடுபடுவது கால்நடைகளின் மரணத்திற்கு வழிவகுக்கலாம்.

 

குறைந்த மற்றும் நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் நுகர்வோரின் விழிப்புணர்வு மற்றும் வாங்கும் திறன் போதுமானதாக இல்லை.  ஆகையால், சுகாதாரத்தையும் மேலாண்மை நடைமுறைகளையும் மேம்படுத்துவதில் ஆர்வம் இல்லை. தேவையான முதலீடும் கிடையாது. இந்நாடுகளில் கொல்லிகள் இல்லாமல் வளர்க்க அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகம் ஆகியவற்றின் ஆதரவு கட்டாயம் தேவை.

 

ஆதார நூற்பட்டியல்

[1]     ரிட்ச்சி, எச். (2014, செப்டம்பர் 10). பெர்ட்யூ உணவுகள் கொல்லிகள் இல்லாத கோழிக்குப் புதிய தரத்தை அமைக்கிறது. வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Ritchie, H. (2014, September 10). Perdue Foods Sets New Standard for Antibiotic-Free Chicken. Retrieved from

http://www.sustainablebrands.com/news_and_views/supply_chain/hannah_ritchie/perdue_foods_sets_new_standard_antibioticfree_chicken?utm_source=Twitter&utm_medium=schtweets&utm_campaign=editorial

[2]     ஸ்மித், டி. சி. (2015, அக்டோபர் 28). கொல்லிகள் இல்லாமல் வளர்க்கப்படும் இறைச்சி' என்றால் என்ன - அது ஏன் முக்கியமானது? வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

Smith, T. C. (2015, October 28). What does 'meat raised without antibiotics' mean - and why is it important? Retrieved from

https://www.washingtonpost.com/news/speaking-of-science/wp/2015/10/28/what-does-raised-without-antibiotics-mean-andwhy-is-it-important/?utm_term=.16618f6863fa

 

Related words.
Word of the month
New word