குமுகப்பிணிகள்
  
Translated

குமுகப்பிணி — பொதுமக்கள் சுற்றுப்பறச் சூழலில் உயிர் வாழும் நுண்கிருமிப்பிணிகளால் பாதிக்கப்பட்டால் இதை குமுகப்பிணி என்று அழைக்கிறோம்.

 

“நுண்கிருமிப்பிணிகளைக் குமுகப்பிணி, மருத்துவமனைப்பிணி என்று வகைப்படுத்துவதால் நோய் எங்கிருந்து தொடங்கியது என்று வரையறுக்க முடிகிறது.”

 

"குமுகப்பிணி நுண்கிருமிகளில் கொல்லிகளின் எதிர்ப்பாற்றல் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன."

 

“கபவாதம், சிறுநீர் பாதைப்பிணி, இரத்தநச்சுப்பாடு ஆகியவை நுண்கிருமிப்பிணிகளாகும்.  30 நாட்களுக்கு இடையில் மருத்துவமனையில் தங்காமல் இப்பிணிகளுக்கு ஆளாகினால், இவற்றைக் குமுகப்பிணிகள் என்று கருதலாம்.”

Learning point

குமூகாயத்திலும் மருத்துவமனையிலும் கிடைத்தப் பிணிகளை நாம் ஏன் வேறுபடுத்துகிறோம்?

 

இந்த இரண்டு அமைப்புகளிலுமுள்ள நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றலைக் குறைப்பதற்கான தடுப்பு வழிகளும் தலையீடுகளும் பெரும்பாலும் வேறுபட்டுள்ளதால், குமுகப்பிணி, மருத்துவமனைப்பிணி என்று பிரிப்பது முக்கியமாகும். தலையீடுகளுக்கான ஒதுக்கீட்டை விமர்சன ரீதியாக தீர்மானிப்பதால், குமூகாயம் மற்றும் மருத்துவமனைகளில் தலையீட்டின் செயல்திறனைத் தனித்தனியாகக் கண்காணிப்பது அவசியமாகின்றது. வேறுபடுத்துவதன் மூலம் நோய் எங்கிருந்து தொடங்கியது என்று வரையறுக்கவும், எந்த நுண்கிருமிகளால் ஏற்படுகிறது என்று ஊகிக்கவும் முடியும்.

 

சமூகத்தில் மக்கள் கொல்லிகளை அதிகப்படியாகவும் தவறாகவும் பயன்படுத்துவதால் குமுகப்பிணி நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் மருத்துவமனை நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றலை விட அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தூய்மையாகக் கைகளைக் கழுவாதிருத்தல், முறையற்ற கழிவு நீர் நிர்வாகம், கழிவுநீரில் எதிர்நுண்கிருமிகள் அதிகரிப்பு ஆகியவை சுற்றுச்சூழல் நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றலைத் தூண்டி சமூகத்தைப் பாதிக்கும். இக்குமுகப்பிணிகள் மக்களுக்கு அதிக இடையூறுகளை ஏற்படுத்தும்.

 

அதேபோன்று, மருத்துவமனைகளில் கொல்லிகளை அளவுக்கு மீறியும் தவறாகவும் பயன்படுத்துவதால் மருத்துவமனை வாழ் நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் குமூகாய நுண்கிருமிகளை விட அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள், உறவினர்கள் ஆகியோர் கைகளை ஒழுங்காக அல்லது அடிக்கடி போதுமான அளவு கழுவவில்லை என்றால் மருத்துவமனை வாழ் நுண்கிருமிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. குமுகாயச் சுற்றுச்சூழலில் கொல்லிகளுக்கும் எதிர்ப்பாற்றல் அடைந்த நுண்கிருமிகளுக்கும் தொடர்புடைய நபர்கள் மருத்துவமனைப்பிணிக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர்.

 

குமுகப்பிணிகளின் தாக்கத்தைக் குறைக்க, கொல்லிகளின் மேலாண்மை, தடுப்பு, தலையீடு வழிமுறைகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், மருத்துவமனைப்பிணிகளின் தாக்கத்தைக் குறைக்க மருத்துவமனைகளில் கொல்லிகளின் மேலாண்மை, தடுப்பு, தலையீடு வழிமுறைகள் ஆகியவற்றில் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள், அவர்களது உறவினர்கள் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.

 

பாதிக்கப்பட்டவர்களின் நோய் வரலாற்றைப் பார்ப்பதன் மூலம் குமுகப்பிணியா அல்லது மருத்துவமனைப்பிணியா என்பதை மருத்துவர்களால் வரையறுக்க முடியும். ஆயினும், எளிமையாக முடிவு செய்ய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்திலும் சிறுநீரிலும் நுண்கிருமிப்பிணிகளைக் கண்டுபிடிக்கப்பட்டால் அது குமுகப்பிணி என்று வரையறுக்கப்படுகிறது. மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மூன்று முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு நுண்கிருமிப்பிணிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதை மருத்துவமனைப்பிணி என்று வரையறுக்கப்படுகிறது.

 

Related words.
Word of the month
New word