கொல்லிகள்
  
Translated

பெனிசில்லின் — இயற்கையாகவே நீல நிற பூஞ்சனத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கொல்லி, பல்வேறு வகையான நுண்ணுயிர்ப்பிணிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் உதவுகிறது. இக்கொல்லிக்குக் கிருமிகளின் எதிர்ப்பாற்றல் அதிகரித்ததால் பெனிசில்லினை அடிப்படையாக வைத்து துணை மருந்துகள் பல உருவாக்கப்பட்டுள்ளன.

 

"பெனிசில்லின் 1928இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.”

 

“ஒரு காலத்தில், பாலியலால் பரவும் தொற்றுநோய்கள் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளைப் பெனிசில்லினால் கொல்லப்பட்டன. அதேபோன்று, கபவாதத்திற்குக் காரணமாயிருந்த ஸ்ட்ரெப்டோகொக்கஸ் நிமோனியா, ஸ்டேஃபஹைலோகொக்கஸ் ஓரியஸ் போன்ற நுண்ணுயிர்கள் பெனிசில்லினால் அழிக்கப்பட்டன. தற்போது, பெனிசில்லின் மூலம் இந்நுண்ணுயிர்களால் வரும் நோய்களைக் குணப்படுத்த முடிவதில்லை.”

 

“பல நாடுகளில் பெனிசில்லினைக் கடைகளில் போய் எவராலும் வாங்க முடியும். அறியாமல் மருந்து அளவைக் குறைத்துத் தன்னுள் உள்ள நுண்கிருமிகளை அழிக்கமுடியாத அளவிற்கு உட்கொண்டால், அவை மருந்துகளை எதிர்க்கும் நுண்கிருமிகளாக மாறும் ஆபத்து உள்ளது.”[1]

 

Learning point

பெனிசில்லின் கண்டுபிடிப்பு

 

1900ஆம் ஆண்டுக்கு முன்னால், காசநோய் மற்றும் கபவாதம் போன்ற நோய்களால் இறப்புக்கள் அதிகமாக நிகழ்ந்தன. கீறல்கள், வெட்டுக்கள், பல் நோய்கள் ஆகியவற்றால் நுண்கிருமிப்பிணிகள் உயிருக்கு ஆபத்தானவையாக இருந்தன. அதிர்ஷ்டவசமாக, 1928ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் ஃப்ளெமிங் தற்செயலாக முதல் கொல்லியைக் கண்டுபிடித்தார், பெனிசீல்லியம் கிரிஸோகெனும் என்ற நீல நிற பூஞ்சனம் அவரது ஆராய்ச்சி சோதனைகளை மாசுபடுத்தியதைக் கவனித்தார். அவர் இன்னும் உன்னிப்பாகப் பார்த்தபோது, ​​‘பூஞ்சனம் சாறு’ சில நுண்ணுயிர்களைக் கொன்று வருவதாக ஃபிளெமிங் கண்டுபிடித்தார். பூஞ்சனத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாரம் பென்சில்லின் என்ற ஒரு கொல்லியாகும்.

 

இரண்டாம் உலகப் போரின்போது சுகாதார வழங்குநர்கள் பென்சில்லினைக் கொண்டு நோய்களுக்கும் காயங்களுக்குச் சிகிச்சையளிக்கும் முறைகளை மாற்றி அமைத்தனர். முதலாம் உலகப்போரில், 18 சதவீத வீரர்கள் நுண்கிருமிப்பிணிகளினால் இறந்தனர். இரண்டாம் உலகப் போரில், பென்சில்லின் வருகையால் ​​ ஒரு சதவீத வீரர்களே நுண்கிருமிப்பிணிகளுக்குப் பலியாகினர்.

 

பென்சில்லின் அல்லது ‘அதிசய மருந்து’ கண்டுபிடித்ததற்காக ஃப்ளெமிங் 1954இல் நோபல் பரிசைப் பெற்றார். இருப்பினும், பென்சில்லினைத் தேவையில்லாத நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் மருத்துவர்கள் துர்ப்பிரயோகம் செய்கிறார்கள் என்று ஃப்ளெமிங் பொதுமக்களை எச்சரித்தார். “பென்சில்லினை எதிர்ப்பதற்கு நுண்ணுயிரிகள் கற்றுக்கொள்கின்றன; பென்சில்லின் எதிர்க்கக்கூடிய நுண்ணுயிரிகள் வளர்கின்றன; எதிர்ப்பாற்றல் கொண்ட இந்நுண்ணுயிரிகள் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்றன; அவர்களைப் பெனிசில்லினால் காப்பாற்ற முடியாது;  இந்நுண்கிருமிப்பிணிகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இரத்தநச்சுப்பாடு, கபவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்; இது போன்ற சந்தர்ப்பங்களில், பென்சிலினுடன் விளையாடும் சிந்தனையற்ற மனிதர்கள்தான் பென்சிலின் எதிர்ப்பு நுண்கிருமிப்பிணிக்கு ஆளாகும் ஒருவர் மரணத்திற்குத் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்; இந்தத் தீமையைத் தவிர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் [1]

 

ஆதார நூற்பட்டியல்

[1]     ஃப்ளெமிங், ஏ. (1945, ஜூன் 26). பெனிகிலின் கண்டுபிடிப்பாளர் அதன் எதிர்காலத்தை மதிப்பிடுகிறார். சர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் கூறுகையில், பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு மேம்பட்ட அளவீட்டு முறை தேவை. பிற விஞ்ஞானிகள் பாராட்டப்பட்ட சுயமருந்துகள் முறைகளைக் கண்டனம் செய்தார். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Fleming, A. (1945, June 26). Penicllin’s finder assays its future. Sir Alexander Fleming Says Improved Dosage Method Is Needed to Extend Use Other Scientists Praised Self-Medication Decried. Retrieved from https://www.nytimes.com/1945/06/26/archives/penicillins-finder-assays-its-future-sir-alexander-fleming-says.html

Related words.
Word of the month
New word