நாசினிகள்
  
Translated

நாசினிகள் — நோயை உண்டாக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் அல்லது செயலிழக்க வைக்கும் மருந்துகள். நாசினிகள் இரண்டு வகைப்படும்:   1. உடலின் தோல் மேல் பயன்படுத்தப்படும் உடற்நாசினி (என்டிஸ்பெட்டிக்), 2. உயிரற்ற மேற்பரப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் அசரநாசினி (டிசின்ஃபெக்டன்ட்).

 

"பொதுவாகப் பயன்படுத்தும் உடற்நாசினிகள் சாராயம், டெட்டோல், கறையம் போன்றவையாகும்."

 

“உடற்நாசினிகள் பொதுவாக முதலுதவி பெட்டியில் கிடைக்கிறது. உடலில் வெட்டு அல்லது காயம் ஏற்படும்போது, ​​காயத்தைச் சாதாரண உப்பு அல்லது தூய்மையான நீரில் சுத்தம் செய்ய வேண்டும், பின்னர் காயத்தின் மீது சாராயம் போன்ற உடற்நாசினிகளைப் பயன்படுத்த வேண்டும்.”

 

“முதலுதவிப் பசைகள் என்றும் அழைக்கப்படும் உடற்நாசினிகள் எளிதாக மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன."

 

"பறவை சளிக்காய்ச்சல் பரவும் போது, ​​அதிகாரிகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பாதிக்கப்பட்ட பகுதியைக் கண்காணித்து அசரநாசினி தெளிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.”

 

Learning point

கொல்லிகளுக்கும் உடற்நாசினிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்ன?

 

கொல்லிகளைப் போலன்றி, தீநுண்மங்கள், பூஞ்சைகள் போன்ற பிற நுண்கிருமிகளுக்கு உடற்நாசினிகள் பயனுள்ளதாக இருக்கும். இது பிற நுண்கிருமிப்பிணிகளுக்கு எதிராகப் போராடுவதில் பயனளிக்கும். நம் உடலிலுள்ள பிணிக்கிருமிகளை அழிக்க கொல்லிகளை உட்கொள்ளலாம், கொல்லி ஊசி போடலாம் அல்லது இரத்தத்தில் ஏற்றிக் கொள்ளலாம். ஆனால், உடற்நாசினிகளை உட்கொள்ளக்கூடாது. திறந்த காயங்கள் போன்ற நமது உடல் மேற்பரப்பு கிருமிகளைக் கொல்ல மட்டுமே பயன்படுத்த முடியும்.

 

 

உடற்நாசினிகள்

கொல்லிகள் 

 

தோலில் வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படுகிறது, (காயங்கள், கீறல் அல்லது வெட்டுக்களுக்கு)

 

வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது அல்லது உடலில் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது

 

சில பொதுவான உடற்நாசினிகள் வகைகள்:

சாராயம் (அல்கஹோல்): பரந்த அளவிலான நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்படும். சரியான நீர்த்தலின் மூலம் நுண்ணுயிரிகளை உகந்த முறையில் கொல்லலாம்.

கறையம் (அயோடின்): அறுவைசிகிச்சை, வெட்டுகள், காயங்கள், கீறல்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

நீரகம் ஈருயிரகம் (ஹைட்ரோஜன் பெரோக்சைட்): காயங்களையும் புண்களையும் சுத்தம் செய்து நாற்றம் நீக்க செய்கிறது. மேலும், தோல் கீறல்களுக்கு முதலுதவியாகப் பயன்படுத்தப்படுகிறது

கார்மவமிலம் (போரிக் எசிட்): கண் கழுவவும் தீக்காயங்களுக்குப் பசையாகவும் பயன்படுத்தப்படுகிறது

 

சில பொதுவான கொல்லிகள் வகைகள்:

பெனிசிலின் குழு: அமோக்ஸிசில்லின் போன்ற கொல்லிகள் பொதுவான கபவாதம், ஸ்ட்ரெப் தொண்டை போன்ற நுண்ணுயிர்ப்பிணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

செஃபலோஸ்போரின்ஸ்: தோல், சிறுநீர் பாதை நுண்ணுயிர்ப்பிணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஃப்ளோரோகுவினலோன்ஸ்: நுண்ணுயிரிகளால் வந்த திடீர் வயிற்றுப் போக்குக்குக் குணமடையப் பயன்படுத்தப்படுகிறது

 

கிருமி நாசினிகளுக்கு எதிர்ப்பு அரிது.

கொல்லிகளுக்கு எதிர்ப்புப் பொதுவானது.

Related words.
Word of the month
New word