எதிர்பூஞ்சைகள்
  
Translated

எதிர்பூஞ்சைகள் — பூஞ்சைகளின் வளர்ச்சியைக் கொல்லும் அல்லது தடுக்கும் திறன் கொண்டவை.


பூஞ்சை எதிர்ப்பாற்றல் — பூஞ்சைகளின் எதிர்பூஞ்சைகளைத் தடுத்தப்போராடும் திறனைக் குறிக்கிறது.

 

“படர்தாமரை/தேமல் போன்ற பூஞ்சைப்பிணிகளுக்குச் சிகிச்சையளிக்க எதிர்பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில பூஞ்சை மருந்துகள் மருத்துவப் பரிந்துரையின்றி மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன (over-the-counter)”

 

"தடகள கால் நோய்க்கு (எத்தலீட்ஸ் ஃபூட்) எதிர்பூஞ்சைப் பசை மூலம் சிகிச்சையளிக்க முடியும்."

Learning point

பூஞ்சை எதிர்ப்பாற்றல் அச்சுறுத்தல்

 

நுண்ணுயிரிகளின் கொல்லிகள் எதிர்ப்புப் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் என்பது நன்கு அறியப்பட்டதாகும். ஆனால், பூஞ்சை எதிர்ப்பாற்றலின் தாக்கம் மற்றும் அதன் இடைஞ்சற்பாடு இன்னும் அங்கீகரிக்கப்படாதவை.

 

சமீப காலங்களில் எதிர்பூஞ்சைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன, இது மருத்துவர்களால் பூஞ்சைப்பிணிகளுக்குச் சிகிச்சையளிக்கும் திறனை அளிக்கிறது. நுண்ணுயிரிகள் போலவே, சில பூஞ்சைகள் எதிர்ப்புத் திறனை உருவாக்கியுள்ளன. மிகவும் பொதுவான பூஞ்சைப்பிணிகளில் ஒன்றானது கேண்டிடெமியா (candidemia), அதாவது கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சை ரத்தத்தில் புகுந்ததால் வரும் பிணி இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது.  இதனால் மனதர்களுக்கு மரணம் கூட வரலாம். கேண்டிடெமியாவை ஏற்படுத்தும் பூஞ்சைகள் இப்போது முதல் மற்றும் இரண்டாம்-வரிசை பூஞ்சை மருந்துகளை எதிர்க்கும் திறனை அடைந்துவிட்டன.[1] இது ஒரு கவலைக்குரியச் செய்தி.

 

நுண்ணுயிரியைப் போலவே, பூஞ்சைகளும் எதிர்பூஞ்சைகளை அடிக்கடி அல்லது தவறாகப் பயன்படுத்தும்போது இயற்கையாகவே எதிர்க்கும் திறனை உருவாக்கி கொள்கின்றன. முறையற்ற பயன்பாட்டிற்கான ஓர் எடுத்துகாட்டு எதிர்பூஞ்சைகளைக் குறைந்த அளவிலோ அல்லது நிலைமையைக் குணப்படுத்தத் தேவையானதை விட குறுகியக் காலத்திற்கே நிர்வகிப்பது.

 

சிகிச்சைகளுக்கு எதிர்த்துப் போராடும் பூஞ்சைகள் வளர்ந்து வருவதால், பூஞ்சைப்பிணி உலகளாவிய உணவுப் பாதுகாப்பைத் தாக்குகின்றன[2]. பயிர்களை அழிக்கும் பூஞ்சைகள் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய பயிர் விளைச்சலில் 20 சதவீத இழப்பை ஏற்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்தில் எதிர்பூஞ்சைகளின் அதிகப்படியான பயன்பாடு பூஞ்சை எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கிறது. எதிர்த்திறன் கொண்ட பூஞ்சை விகாரங்கள் விரைவாகப் பரவி உலகளவில் உணவுவை உற்பத்திச் செய்யும் திறனை அழிக்கக்கூடும்.

 

ஆதார நூற்பட்டியல்

[1]     நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் (2018). பூஞ்சை எதிர்ப்பாற்றல் | பூஞ்சைப்பிணிகள். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.
Center for Disease Control and Prevention (CDC). (2018, September 27). Antifungal Resistance | Fungal Diseases | CDC. Retrieved from https://www.cdc.gov/fungal/antifungal-resistance.html

[2]     ஃபிஷர், எம். சி., ஹாவ்க்கின்ஸ், என். ஜே., சாங்லார்ட், டி., & குர்ர், எஸ். ஜே. (2018). உலகளாவிய பூஞ்சை எதிர்ப்பாற்றல் மனித ஆரோக்கியத்திற்கும் உணவு பாதுகாப்பிற்கும் சவால் விடுகிறது.

Fisher, M. C., Hawkins, N. J., Sanglard, D., & Gurr, S. J. (2018). Worldwide emergence of resistance to antifungal drugs challenges human health and food security. Science,360(6390), 739-742. doi:10.1126/science.aap7999

Related words.
Word of the month
New word