பூஞ்சைகள்
  
Translated

பூஞ்சைகள் — சாதாரணமாகக் கண்களால் பார்க்க முடியாத எளிய, சிறிய, உயிருள்ள கிருமிகள். இருப்பினும், பல பூஞ்சைகள் கண்ணால் காணக்கூடியப் பூஞ்சனமாக உருவாகின்றன. ஒரு பூஞ்சை என்பது ஓர் உயிரணுவும் ஓர் அணுக்கருவும் கொண்ட ஓர் உயிர் வடிவம் ஆகும்.

 

“காளான்கள், காடிகள், பூஞ்சக்காளன்கள் ஆகியவை பூஞ்சைக்கு எடுத்துகாட்டுகள் ஆகும்.”

 

“சில பூஞ்சை இனங்கள் விலங்குகள், மனிதர்கள் மற்றும் தாவரங்களுக்குப் பிணியை ஏற்படுத்துகின்றன."

Learning point

கொல்லிகள் பூஞ்சைப்பிணியை எவ்வாறு பாதிக்கின்றன?

 

ஒரு பழங்கால உயிரினமான பூஞ்சைகள் காற்றிலும், மண்ணிலும், தாவரங்களிலும், தண்ணீரிலும், வாழ்கின்றன. சில பூஞ்சைகள் காற்றில் உள்ள சிறிய வித்துகளின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. நீங்கள் வித்துகளைச் சுவாசிக்கலாம் அல்லது அவை உங்கள் மீது இறங்கலாம். மனிதர்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான பூஞ்சைப்பிணிகள் கால் ஆணி, தேமல் மற்றும் யோனி காடிப்பிணிகள் ஆகும்.

 

பெரும்பாலும், பூஞ்சைப்பிணிகள் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு (உதாரணமாக எச்.ஐ.வி நோயாளிகள்) உள்ளவர்களைப் பாதிக்கும். கொல்லிகளை உட் கொண்டால் கடுமையான பூஞ்சைப்பிணி ஏற்பட வாய்ப்புள்ளது. கொல்லிகள் பூஞ்சைகளைக் கொல்லாது. அவை நுண்ணுயிர்களை மட்டுமே கொல்லும். எடுத்துகாட்டாக, யோனியிலுள்ள இயற்கை நுண்ணுயிர்கள் உங்களை தீங்குகளிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக இருக்க உள்பூஞ்சைகளுடன் தங்களை சமநிலைப்படுத்திக் கொண்டு யோனியை ஆரோக்கியமாக வைக்கின்றன. கொல்லிகள் யோனியில் உள்ள இயற்கை நுண்ணுயிர்களைக் கொல்லும்போது, ​​பூஞ்சைகள் அளவுக்கு மேல் அதிகரித்து நோயை ஏற்படுத்தும்.

 

யோனி காடிப்பிணிகள் என்பது கொல்லிகள் பயன்பாட்டினால் ஏற்படும் பொதுவான சிக்கலாகும். ஸ்ட்ரெப் தொண்டை போன்ற பிறப்பிணிகளுக்குக் கொல்லிகளை உட்கொள்ளும்போதும்கூட யோனி காடிப்பிணிகள் உண்டாகலாம். எனவே, கொல்லிகளை நமக்கு உண்மையில் தேவைப்படும்போது மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

 

நுரையீரல் பூஞ்சைப்பிணிகள் ஆபத்தானவை. இந்நோய்களின் அறிகுறிகள் பெரும்பாலும் சளிக்காய்ச்சல், காசநோய் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். கபவாதத்திற்குக் கொல்லிகள் உட்கொள்ளும்போது சரியாகவில்லையென்றால் பூஞ்சைப்பிணி இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பூஞ்சைப்பிணிகளுக்கான ஆரம்ப பரிசோதனையை உடனடியே செய்தால் தேவையற்றக் கொல்லிகள் பயன்பாட்டைக் குறைத்து எதிர்பூஞ்சைகள் சிகிச்சையளிப்பதற்கு வழி வகுக்கும்.

 

ஆதார நூற்பட்டியல்

[1]     நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் (2019).  பூஞ்சைப்பிணிகள் - உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும்

Center for Disease Control and Prevention (CDC). (August 2019). Fungal Infections - Protect Your Health | Features | CDC. Retrieved from

https://www.cdc.gov/features/fungalinfections/index.html

Related words.
Word of the month
New word