காசநோய்கொல்லி
  
Translated

காசநோய் — காசநோய் என்பது மைக்கோபெக்டீரியம் தூபெர்குளோஸிஸ் (Mycobacterium tuberculosis) எனும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோயாகும். இந்நுண்ணுயிரிகள் பொதுவாக நுரையீரலைத் தாக்குகிறது. அவை உடலின் மற்ற பகுதிகளையும் சேதப்படுத்துகிறது. இருமல், தும்மல், பேசும் போதும், காற்று வழியாகவும் காசநோய் பரவுகிறது. பொதுவாக ஆங்கிலத்தில் டீபி (TB) அல்லது தூபெர்குளோஸிஸ் எனக் கூறப்படுகிறது.

 

காசநோய் கொல்லிகள் / எதிர்காசநோய்கள் — காசநோயை உருவாக்கும் காசநோய் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைக் கொல்லும் அல்லது தடுக்கும் திறனைக் கொண்டிருப்பவை.


பன்மருந்தெதிர்ப்பு — குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் ஒரு வகை மருந்தையாவது தடுக்கும் திறன் கொண்ட கிருமிகள். இவ்வாறு எதிர்க்கும் திறன் கொண்ட கிருமிகளைப் பெருங்கிருமிகள் என்று அழைக்கிறோம்.

 

"ஒரு சுற்று சிகிச்சை முறையை முடிக்க காசநோய் நோயாளிகள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் காசநோய் கொல்லிகளை உண்ண வேண்டும்."

 

“காசநோய் கொல்லிகளுக்கு எதிர்ப்பின் வ"நோயாளிகள் முறையற்ற முறையில் காசநோய் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது அல்லது முன்கூட்டியே நிறுத்தும்போது பன்மருந்தெதிர்ப்பு பெருங்கிருமிகள் உருவாகிறது."ளர்ச்சி, நோயாளி மற்றும் பிறருக்கும் பெருந்துயரம் தருவது ஆகும்."

Learning point

மருந்தெதிர்ப்புக் காசநோய்க்கு எதிரான போர்

 

மைக்கோபெக்டீரியம் தூபெர்குளோஸிஸ் எனும் நுண்ணுயிரிகளால் காசநோய் ஏற்படுகிறது. இருமல், தும்மல், துப்புதல், பேசுதல் ஆகியவற்றின் போது காற்றில் வெளியாகும் சிறிய நீர்த்துளிகள் மூலம் இந்நுண்ணுயிர்ப்பிணி மக்களிடம் பரவுகிறது.  பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட நோயாளிகள், உதாரணமாக, எச்.ஐ.வி (HIV), ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு, புகைபிடிப்பவர்கள் ஆகியோருக்கு எளிதில் காசநோய் வருவதற்கான ஆபத்து உள்ளது.[1]

 

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்த இருமல் உள்ள யாவரும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெற வேண்டும். ஏனெனில், இது காசநோயின் பொதுவான அறிகுறியாகும். காசநோய்க்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு நுண்ணுயிர்கள் எதிர்க்கும்போது மருந்தெதிர்ப்புக் காசநோய்க்கு ஆளாகிறார்கள். இந்நுண்ணுயிர்களை எந்த ஒரு காசநோய் கொல்லிகளாலும் அழிக்க முடியாது.

 

காசநோய் குணப்படுத்தக்குடிய நுண்ணுயிர்ப்பிணியாகும். மருந்தெதிர்ப்புக் காசநோய்ப் பரவுவதைத் தடுப்பதற்கான மிக முக்கியமான வழி, அனைத்து காசநோய் மருந்துகளையும் சுகாதார வழங்குநரால் பரிந்துரைக்கப்பட்டபடி சரியாக எடுத்துக்கொள்வதாகும். எந்த அளவையும் தவறவிடக்கூடாது. மற்றும் சிகிச்சையை முன்கூட்டியே நிறுத்தக்கூடாது. காசநோயாளிகள் மருந்துகளை உட்கொள்வதில் சிக்கல் இருந்தால் தங்கள் உடல்நலப் பாதுகாப்பு வழங்குநரிடம் தெரிவிக்க வேண்டும்.[2]

 

பன்மருந்தெதிர்ப்பு காசநோய் பெருங்கிருமிகள் வளர்ச்சியையும் பரவுதலையும் மாற்றியமைக்க இன்னும் சாத்தியம் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியமாகும்.

 

ஆதார நூற்பட்டியல்

[1]    உலக சுகாதார அமைப்பு (2018, ஜனவரி 18). காசநோய் என்றால் என்ன? இது எவ்வாறு ஏற்படுகிறது? வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

World Health Organization. (2018, January 18). What is TB? How is it treated? Retrieved from http://www.who.int/features/qa/08/en/

[2]    நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் (2020, மார்ச் 7). அடிப்படை காசநோய் உண்மைகள். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Center for Disease Control and Prevention (CDC). (2020, March 7). Basic TB facts.  Retrieved from https://www.cdc.gov/tb/topic/basics/default.htm

Related words.
Word of the month
New word